செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரெலோவின் முக்கியஸ்தர் குகனின் 27 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

ரெலோவின் முக்கியஸ்தர் குகனின் 27 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

0 minutes read

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் இராஜரட்ணம் கிறிஸ்டி குககராஜா (குகன்) அவர்களின் 27ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகன் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன்போது மறைந்த குகனின்  விடுதலைப் பங்களிப்பு மற்றும் மாவட்ட ரீதியிலான மக்கள் பணிகள் இதன்போது நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.