செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிக்குளம் பகுதியில் 753 ஏக்கர் காணிகள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படும் | அருண ஜயசேகர

முள்ளிக்குளம் பகுதியில் 753 ஏக்கர் காணிகள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படும் | அருண ஜயசேகர

0 minutes read

முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 1012 ஏக்கர் காணிகளில், 753 ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில்  இன்று இடம்பெற்றபோதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படும் காணி  பகுதிகளில் காடழிப்புக்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக வனவளத்திணைக்களத்திடமே அந்தக் காணிகளை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையிருப்பின், அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானங்களை உரிய அமைச்சுக்கு அனுப்பிவைக்கின்றபோது அந்தக் காணிகளை மக்களுக்கு விடுவித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.