செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

1 minutes read

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துயரச் சம்பவம் தொடர்பான நினைவு நாள் வெள்ளிக்கிழமை (12) அனுசரிக்கப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி, ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை சேருவில பகுதியிலிருந்து எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அக்காலத்தில் நிலவிய யுத்தச் சூழ்நிலையால் இடம்பெயர்ந்திருந்த மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வாராந்தம் வழங்கப்பட்டு வந்தன.

அவ்வாறு 1986 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி நிவாரணப் பொருட்களை எடுத்துவரச் சென்ற குழுவினர், சேருவில – மகிந்தபுரம் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்த நிலையில் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்களும் அடங்கியிருந்தனர்.

இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

1.தங்கராஜா கிராம சேவகர் (பூமரத்தடிச்சேனை) ஈச்சிலம்பற்று முகாம்)

2.அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்

3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் -(பாலத்தோப்பூர்)-மீள்குடியேற்ற உத்தியோகத்தர்- பூநகர் முகாம்

4.கோணாமலை வேலாயுதம் பூமரத்தடிச்சேனை

5.கதிர்காமத்தம்பி விநாயகமூர்த்தி பூமரத்தடிச்சேனை

6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை

7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்

8.கனகசபை கனகசுந்தரம் பூநகர்

9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி பூநகர்

10.மூத்ததம்பி காசிப்பிள்ளை பூநகர்

11.கதிர்காமத்தம்பி நாகராசா பூநகர்

12.வீரபத்திரன் நடேசபிள்ளை பூநகர்

13.முத்தையா காளிராசா பூநகர்

14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை பூநகர்

15.வேலுப்பிள்ளை சித்திரவேல் விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

16.சித்திரவேல் சிவலிங்கம் விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

17.வீரபத்திரன் சோமசுந்தரம் விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்

20.தாமோதரம் தர்மலிங்கம் ஈச்சிலம்பற்று

21.புண்ணியம் மதிவதனன் பூமரத்தடிச்சேனை

அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.