செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் | 795 சந்தேகநபர்கள் கைது!

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் | 795 சந்தேகநபர்கள் கைது!

1 minutes read

முழு நாடுமே ஒன்றாக என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய திங்கட்கிழமை( 20 ) மாத்திரம் 795 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடு முழுவதும் சுமார் 793 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 795 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகமைய 460 கிராம் ஐஸ் போதைப்பொருள், 535 கிராம் கஞ்சா மற்றும் 296 போதை மாத்திரைகள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதான சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்புத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 3 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 4 பேர் மறுவாழ்வு மத்தியநிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.