வானிலிருந்து தரையையும் கடலையும் அழிக்கும் அதிவேக குண்டு வீச்சு விமானங்களை தயாரிக்கும் சீனா!!

ஒலியை விட பன்மடங்கு வேகமாகச் செல்லும் குண்டு வீச்சு விமானத்தை இவ்வாண்டின் மத்தியில் தயாரித்து முடிக்க சீனா ஆயத்தமாகி வருகிறது.

ஸியான் ஹெச் 20 என்ற இந்த குண்டு வீச்சு விமானத்தை சொந்தமாகத் தயாரிக்கும் திட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்த விமானம் முழுவதும் தயாரிக்கப்பட்டு விட்டால் ஜப்பான், கொரியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா வரை சீனாவால் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஸியான் ஹெச் 20 வகை விமானங்கள் வானிலிருந்து தரையிலும், கடலிலும் உள்ள இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் வல்லமை கொண்டவை. இந்த விமானக் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து விட்டால் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த நாடாக சீனா விளங்கும்.

ஆசிரியர்