செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்!

0 minutes read

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரே நேரத்தில் வழமைப் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இதுவரை மாநிலங்களவை காலை நேரத்திலும் மக்களவை மாலையிலும் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரச்சாரம் போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி ஏப்ரல் 8ம் திகதி வரை நீடிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மார்ச் இறுதிக்குள் நிறைவு செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசித்து வரும் சபாநாயகர் ஓம் பிர்லா விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.