செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ இங்கிலாந்தின் மலையை வாங்க இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்புபிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ இங்கிலாந்தின் மலையை வாங்க இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு

பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ இங்கிலாந்தின் மலையை வாங்க இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்புபிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ இங்கிலாந்தின் மலையை வாங்க இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு

1 minutes read

இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் கும்பிரியாவும் ஒன்று. இங்குள்ள லேக் மாவட்டத்தில் காணப்படும் 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையானது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது.

கடந்த 2006ஆம் ஆண்டில் இவர் இறந்தபின்னர் இவரது சொத்துக்களுக்கு வாரிசான இவரது மகன் அரசுக்கு தான் செலுத்த வேண்டிய 9 மில்லியன் பவுண்டு வரி பாக்கிக்காக இதனை விற்க முன்வந்துள்ளார். 2,676 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைக்கான விற்பனை விலையாக 1.75 மில்லியன் பவுண்டு நிர்ணயிக்கப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது.

பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஊக்குவிப்பு சக்தியாக இருந்துள்ள இந்த மலைப்பகுதி தனியார்வசம் சென்றால் உயரடுக்கு செல்வந்தர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சம் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் எழுந்தது.

இதனால் ‘பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ என்ற ஒரு இயக்கம் இந்த மலை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டு சமூக சொத்தாக மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வந்தது.  ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்றி இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்த எச்-எச் சொத்து விற்பனை நிறுவனரான ஜான் ராப்சன் இதற்கான ஒரு விற்பனை வாய்ப்பும் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

பின்னர் இந்த மலையை வாங்குவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தவர் இந்தியத் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் என்பதுவும், நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்பனைத் தொகையைவிடக் கூடுதலாக அவர் கேட்டிருப்பதுவும் வெளித் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த நண்பர்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், சொத்து வரி பாக்கிக்காக விற்பனை நடைபெற இருப்பதால் விரைவில் நியாயமான முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் எச்-எச் சொத்து விற்பனை நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.