செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கக்கோரி போராட்டம்!

அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கக்கோரி போராட்டம்!

0 minutes read

2020 அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உடன் தொழில் வாய்ப்பு வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கொழும்பில் நேற்று (01) போராட்டம் நடத்தியது.

“வாக்குறுதியை நிறைவேற்று” “வெட்டாமல் அனைவருக்கும் தொழில் கொடு!” என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த அவர்கள் பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றனர். ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.