செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் | மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் | மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

2 minutes read

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்தியய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

A. மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-

1. மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கி கிளை : தலைமைச் செயலக கிளை,
சென்னை – 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு : IOBA0001172
CMPRF பான் எண் : AAAGC0038F
SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம்,
சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).

ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை தயவுசெய்து வழங்கவும்:-

பங்களிப்பாளரின் பெயர் :
பங்களிப்பு தொகை :
வங்கி மற்றும் கிளை :
பணம் அனுப்பும் தேதி :
பரிவர்த்தனை குறிப்பு எண்:
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
மின்னஞ்சல் முகவரி :
தொலைபேசி எண் / கைபேசி எண். :
UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay,
Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள்.

B. காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-

The Joint Secretary to Government & Treasurer,
Chief Minister’s Public Relief Fund,
Finance (CMPRF) Department,
Secretariat, Chennai 600 009,
Tamil Nadu, India.

அரசு இணைச் செயலாளர் & பொருளாளர்,
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி,
நிதி(மு.பொ.நி.நி) துறை,
தலைமை செயலகம், சென்னை 600 009,
தமிழ்நாடு, இந்தியா.

என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கலாம். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்…. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.