மத்திய கலாசார நிதியத்தின் நாளாந்த வருமானம் 9 இலட்சம் ரூபா வரை குறைவடைந்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, புராதன இடங்களுக்கு செல்வதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதற்கு முன்னர், மத்திய கலாசார நிதியத்தின் தினசரி வருமானம் 70 இலட்சத்திற்கும் அதிகமாகும்.
நிலவும் நெருக்கடி சூழ்நிலை காரணமாக மத்திய கலாசார நிதியத்தின் அனைத்து அகழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ள அதேநேரம், ஊழியர்களுக்கான சம்பளம் மாத்திரமே வழங்கப்படுவதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.