செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உழவு இயந்திரக்கோளாறு காரணமாக இருவர் பலி

உழவு இயந்திரக்கோளாறு காரணமாக இருவர் பலி

0 minutes read

மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வயல் காணிக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

செங்கலடியை சேர்ந்த 53 மற்றும் 56 வயதான இருவரே விபத்தில் சிக்கியுள்ளனர்.

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.