உலகளவில் எரிவாயு பயன்பாடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் குறையும் என்று சர்வதேச எரிசக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளது. அத்துடன் எரிவாயுவின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.
அதன் காரணமாகப் பயனீட்டாளர்கள் எரிவாயுவுக்குப் பதிலாக மாற்றுவழிகளில் எரிசக்தியைப் பெற ஆரம்பித்துள்ளனர் என்று அமைப்பு கூறியது.
உக்ரைனியப் பூசல், உலகளவிலான எரிவாயு விலையைப் பாதித்திருப்பதுடன், விநியோகத் தொடரில் நெருக்குதலையும் உருவாக்கியுள்ளது என்று அது சுட்டிக்காட்டியது.
இயற்கை எரிவாயு, கட்டுப்படியான, நம்பகமான எரிசக்தியாகக் கருதப்படுவதையும் அது மாற்றியமைக்கக்கூடும் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.
ரஷ்யா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவைக் குறைத்திருக்கும் வேளையில், ஐரோப்பிய நாடுகளும் அதனிடமிருந்து எரிவாயு பெறுவதைக் குறைத்துக்கொள்ளப்போவதாகக் கூறியுள்ளன. அதன் தாக்கம் உலகெங்கும் எதிரொலிக்கிறது.