செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சீனாவில் கொவிட் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு

சீனாவில் கொவிட் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு

0 minutes read

சீனாவின் சிறு நகர் ஒன்றில் ஒரே ஒரு கொவிட்–19 தொற்றுச் சம்பவம் காரணமான ஆயிரக்கணக்கானோர் பொது முடக்கத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

ஹுனான் மாகாணத்தில் உருக்கு உற்பத்தி மையமாக இருக்கும் வுகாங் நகரிலேயே கடந்த திங்கட்கிழமை புதிய தொற்றுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனை அடுத்து மூன்று நாட்களுக்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அந்த நகர் நெருக்கமாக அவதானிக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி நாளை வியாழக்கிழமை வரை நகரில் இருக்கும் 320,000 பேரும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் ஒமிக்ரோன் திரிபினால் சீனாவில் கொவிட் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.