செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தானிஸ் அலிக்கு நீடிக்கும் விளக்கமறியல்

தானிஸ் அலிக்கு நீடிக்கும் விளக்கமறியல்

0 minutes read

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஔிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குருணாகல், வேபட பிரதேசத்தைச் சேர்ந்த தானிஸ் அலி எனும் நபர்,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் செல்ல முற்பட்ட வேளையில் விமானமொன்றில் வைத்து கடந்த ஜூலை 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துமீறி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி அலுவலகத்திற்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தானிஸ் அலிக்கு ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க குறித்த உத்தரவை விடுத்தார்.

ரூபவாஹினிக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்கு விசாரணையில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய,

சந்தேகநபரை இன்று (01) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.