செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மொட்டுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலை

மொட்டுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலை

0 minutes read

முல்லேரியா, கொட்டிகாவத்தை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று (02) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் முல்லேரியா பிரதேச்திலுள்ள வங்கிச் சந்தி பகுதியில் நின்றிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.