செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் எலிசபெத் மறைவை அடுத்து ஒரு குடியரசாக மாற உள்ள அன்டிகுவா

எலிசபெத் மறைவை அடுத்து ஒரு குடியரசாக மாற உள்ள அன்டிகுவா

0 minutes read

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை அடுத்து ஒரு குடியரசாக மாறுவது பற்றி அன்டிகுவா மற்றும் பார்புடாவில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக அந்நாட்டு பிரதமர் கஸ்டோன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நடத்தப்படும் என்றும் இது ஒரு விரோதச் செயல் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் நாட்டின் அரச தலைவர் என்பதை உறுதி செய்யும் அறிவிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் அடுத்து நான்கு ஆண்டுகளுக்குள் இவ்வாறான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படமாட்டாது என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அன்டிகுவா மற்றும் பார்புடா 1981இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோதும் பொதுநலவாயத்தில் இருக்கும் 15 நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நாடுகள் பிரிட்டனின் மன்னரை தங்கள் அரச தலைவராக பகிர்ந்துகொள்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.