செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “பார்க்கலாம் வா மச்சீ” சந்தானத்தின் உற்சாகக் குரல் | காதல் சுகுமார் நெகிழ்ச்சி

“பார்க்கலாம் வா மச்சீ” சந்தானத்தின் உற்சாகக் குரல் | காதல் சுகுமார் நெகிழ்ச்சி

1 minutes read

இன்று படப்பிடிப்பு தருணத்தில் நடிகர் சந்தானத்தை சந்தித்த காதல் சுகுமார், அங்கு நண்பர்களான தாம் உரையாடியதை அப்படியே தன் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதோ சுகுமாரின் பதிவு…

“பார்க்கணும்டா மச்சான்”

என்றதுமே “வா மச்சீ” சந்தானத்தின் உற்சாகக் குரல்.

பார்த்ததும் பழைய காதலியை சந்தித்ததைப் போல ஓர் உணர்வு..

ஷாட்டுக்கு ரெடியாக இருந்தவன் எனைப் பார்த்ததும் சந்தானம்… “வா மச்சான்

“நீ எப்டிடா அப்டியே இருக்க?”

“நீயும்தான்”.

எண்ணம்தானே மச்சான்.எல்லாம்…!!

காதல் அழிவதில்லை, வல்லவன் என பழைய கதைகளை சொல்லி சிரித்து விட்டு.. “என்ன மச்சான் எதாவது…

“உதவிலாம் எதும் கேட்டு வரலடா. ஒரு சக கலைஞனா நண்பனா எனக்கொரு படம் பண்ணிக் குடுக்கணும்”.

“லைன் இருக்கா?”

“ஸ்கிரிப்டே ரெடி .!

“ஒருநாள் சொல்றேன் ஃப்ரீயா இருக்கப்போ வா..!!”

என்றான்..(ஷாட் ரெடி)

“சரி கிளம்புறேன் மச்சி மகிழ்ச்சி” என்றதும் என்ன நினைத்தானோ

“சரி லைன் சொல்லு” என்றவன்… நின்ற நிலையிலேயே 10 நிமிடம் நான் சொன்னதை ரசித்து கட்டியணைத்துக் கொண்டு..

” சூப்பர்டா ..நீ ஜீனியஸ்.. எனக்கு அப்பவே தெரியும் .. விரைவில் அழைக்கிறேன்” என்றான்.

கொட்டாச்சி, கூல்சுரேஷ், எனபழைய நண்பர்களை நினைவு படுத்தி நாமெல்லாம் மறுபடி ஒரு படத்துல சேர்ந்து நடிக்கணும் மச்சி என்றான்.

நிச்சயம் செய்வான்.. வளரும்போதே தன் படங்களில் உடன் பயணித்த நண்பர்களை நடிக்க வைத்தவன்.!!!

மகிழ்ச்சி மச்சி.

நன்றி – முகநூல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.