செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ரிஷி சுனக் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

ரிஷி சுனக் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

0 minutes read

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பயணித்துள்ளார்.

இந்தத் திடீர் சந்திப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி தனது ட்விட்டரில், அவர் எனது நண்பர். திரு சுனக்கைச் சந்தித்து, கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து அறிவித்திருந்தது.

அத்துடன், உக்ரைனின் பாதுகாப்பிற்கு உதவ நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இங்கிலாந்து வழங்கவிருப்பதை இன்று (15) பிற்பகல் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக மேற்கத்திய தலைவர்களை சமீப நாட்களாக ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.