செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

0 minutes read

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம், ஜாக்சன்வெலி பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

அப்பகுதியின் டாலர் ஜெனரல் என்ற இடத்தில் வெள்ளை இனத்தவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர், ஆண்கள் இருவர் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், பொலிஸார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.