செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஜோ பைடனுடன் நடத்தவிருந்த உயர்நிலை சந்திப்பு இரத்து

ஜோ பைடனுடன் நடத்தவிருந்த உயர்நிலை சந்திப்பு இரத்து

0 minutes read

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நடத்தவிருந்த உச்சநிலைச் சந்திப்பை ஜோர்தான் இரத்துச் செய்துள்ளது.

இந்தச் சந்திப்பில் ஜோர்தான், எகிப்து மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்துப் பேசவிருந்தார்.

காஸாவுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது குறித்தும் இஸ்ரேலுடனான பூசலைத் தணிப்பது குறித்தும் தலைவர்கள் விவாதிக்க இருந்தனர்.

எனினும், குறித்த உயர்நிலை சந்திப்பு தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

“பேசிப் பயன் இல்லை. போரை முதலில் நிறுத்தவேண்டும்” என்று ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடி (Ayman Safadi) தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த அனைத்துத் தரப்பினரும் இணங்கும்போது குறித்த சந்திப்பு நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோ பைடனைச் சந்திக்கவிருந்த பாலஸ்தீன ஜனாதிபதியும் இதனை இரத்துச் செய்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.