செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமையை ஏற்றது சீனா

ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமையை ஏற்றது சீனா

0 minutes read

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. சபையின் 6 அங்கங்களில் ஒன்றான UNSC எனப்படும் பாதுகாப்பு சபையின் தலைமை பதவி சீனா வசம் வந்துள்ளது.

1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளதுடன், இதில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன.

பாதுகாப்பு சபையின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது.

தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை வகித்தது

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.