செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா குடிக்க தண்ணீர் தேடிய 32 குரங்குகள் கிணற்றில் குதித்து மரணம்

குடிக்க தண்ணீர் தேடிய 32 குரங்குகள் கிணற்றில் குதித்து மரணம்

1 minutes read

ஜார்க்கண்ட், பலாமு மாவட்டம், பன்கி தாலுகாவில் உள்ள சொரத் என்ற கிராமத்தில் உள்ள மிக பெரிய விவசாய கிணற்றில் குதித்து குரங்குகள் கூட்டம் தண்ணீர் குடித்துள்ளன. இதில், 32 குரங்குகள் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக கோட்ட வன அதிகாரி தெரிவித்தார்.

‘‘வன பகுதியில் இருந்து வந்துள்ள குரங்குகள் கூட்டம் நீர் அருந்துவதற்காக கிணற்றில் குதித்துள்ளன. இதில், நீரில் மூழ்கி 32 குரங்குகள் இறந்து கிடந்தன. அந்த கிணற்றில் போதுமான அளவு நீர் உள்ளது.

‘‘குரங்குகள் இறந்ததற்கான காரணம் குறித்து அறிய அவற்றின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

‘‘ஜார்க்கண்டின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் நீர்நிலைகளில் நீர் வற்றி வருகின்றன. இதன் காரணமாக வன விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன’’ என்றார் கோட்ட வன அதிகாரி குமார் அஷிஷ்.

கிணற்றில்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.