புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு உயர்நீதிமன்றில் இணக்கத் தீர்வு!

வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு உயர்நீதிமன்றில் இணக்கத் தீர்வு!

1 minutes read

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பிரதேசம் தொடர்பான சர்ச்சைக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு ஒன்று காணப்பட்டது.

மேற்படி ஆலயம் காணப்படும் பிரதேசத்தில் தொன்மையான மரபுரிமை சின்னங்கள் இருக்கின்றன என்று தெரிவித்து, அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டு, மூன்று பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரட்ண, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயப் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

தொன்மையான மரபுரிமை இடங்கள், நிலையங்கள், சின்னங்கள் அங்கிருந்தாலும் வரலாற்றுக் காலத்தில் இருந்து அங்கு மேற்படி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடு நடைபெற்று வருவதால் அதைக் தடுக்க முடியாது, தடுக்கக் கூடாது என்று இருவரும் வாதிட்டனர்.

மேற்படி தொன்மையான மரபுரிமை மையங்களுக்கு பாதிப்போ, சேதமோ ஏற்படுத்தாமல் இரண்டு தரப்பினரும் தங்கள் வழிபாடுகளை தடையின்றி முழு அளவில் ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இணக்க ஏற்பாட்டை நீதிமன்றம் வழங்கியது.

இவ்விடயத்தை ஒட்டி வவுனியா நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கும், இன்று உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த இணக்க ஏற்பாட்டை தெரிவித்து, அதன் அடிப்படையில் தீர்வு காண்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.