அகமதாபாத் விமான விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிக் ஜோஷி (வயது 45), அவரது மனைவி கோமி வியாஸ் (வயது 40), அவர்களின் 3 குழந்தைகளே இந்த விபத்தில் ஒருமித்து பலியாகியுள்ளனர்.
பிரதிக் ஜோஷி, கடந்த 06 வருடங்களாக இலண்டனில் வசித்து வந்துள்ளார். மென்பொருள் நிபுணரான இவர், தனது மனைவி மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த மூன்று இளம் குழந்தைகளுக்கு வெளிநாட்டில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கனவு கண்டிருந்தார்.

பல வருட திட்டமிடல், காகித வேலைகள் மற்றும் பொறுமைக்குப் பிறகு, அந்தக் கனவு இறுதியாக நனவாகியது.
அதாவது 03 நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி, மருத்துவ நிபுணரான Doctor கோமி வியாஸ், இந்தியாவில் தனது வேலையை இராஜினாமா செய்தார்.
அடுத்து அவர்கள் தமது புதிய வாழ்க்கைக் கனவைத் தேடி, இலண்டன் பயணித்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்தி : AI 171 விமானத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணி இவர்தான்!
விபத்து இடம்பெறுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னர் அவர்கள் குடும்பமாக எடுத்துக்கொண்ட செல்ஃபியையும் தமது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
தற்போது அந்த செல்ஃபி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், பலர் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
