அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் AI 171 என்ற விமானம், நேற்று வியாழக்கிழமை (12) விபத்துக்குள்ளானது.
ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (13) வருகை தந்தார்.
சம்பவ இடத்தில் அதிகாரிகள் சகிதம் பிரதமர் கள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள் : விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மரணம்!
குஜராத் மாநிலம் – அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் இருந்தனர்.
