வூல்விச்சில் உள்ள பிளம்ஸ்டெட் வீதியில், 20 வயது நபர், வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு முன்பு, ஒரு குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேக நபர்களை அவசரமாக கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், சாம்ஸ் சிக்கன் மற்றும் பொது சந்தை கட்டிடத்திற்கு முன்னால் உள்ள விக்டரி பரேடில் பேருந்து நிறுத்தங்களுக்குப் பின்னால் ஒரு பொலிஸ் சுற்றி வளைப்பு நடவடிக்கை இருந்ததைக் காட்டுகின்றன.
“20 வயதுடைய ஒருவருக்கு ஏற்பட்ட பல கத்திக்குத்து காயங்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என மதிப்பிடப்பட்டுள்ளது.
எவரும் கைது செய்யப்படவில்லை, மேலும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் அவசர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என பொலிஸார் கூறினர்.