இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 7 ஆண்டில் முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அவருடைய இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 31 ஆம் திகதி, ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைச் சந்திப்பு சீனாவில் நடைபெறவுள்ளது.
அதில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளவிருப்பதாக இந்திய அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள்காட்டி Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு ஏதும் குறிப்பிடவில்லை.
தொடர்புடைய செய்தி : அமெரிக்கா – இந்தியா அரச உறவில் விரிசல்!
இந்தியப் பொருள்கள் மீதான வரியை 50 சதவீதத்திற்கு அமெரிக்கா உயர்த்தும் எனும் அறிவிப்பு வந்த பின்னர், பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்வது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்படுகிறது.