கதை சொல்லி
காவியம் எழுதிட
செஞ்சோலைச் சிறுமியர்
கதைப் பொருளல்ல.
குருதி தோய்ந்த
மேனியில் இருந்து
உயிர் பிரிந்த
கொடுந்தூயரம் அது.
வெள்ளாடை நிறம் மாறி
செந்நிறம் ஆகி
ஈழமண்ணில் சிந்திய
குருதியின் சாட்சி.
பொய்யுரை கொண்டு
பொதுமக்களை தாக்கி
பயங்கரவாதி என்றுரைத்து
உலகை ஏமாற்றியது.
உலகமும் கூட
நம்பித் தான் ஏமாந்தது.
இன்றளவும் அது
தன்னை மாற்றவில்லை.
பிரிவுத் துயரில்
துவண்ட தமிழினம்
இழந்து விட்ட – ஐம்பத்து
இரண்டு சிறார்களை.
மறந்திட துணிந்திடாத
பொரும் சோக நிகழ்வு.
நெஞ்சில் பொங்கிய தீ
முட்டி விட்டது பெரு நெருப்பு.
கூடு புகுந்து எரித்த
சாகசமும் நடந்தது.
காரணம் சரியானது.
நெஞ்சம் தீரவில்லை.
வலிந்து வந்து
வன்முறை செய்தது.
தனித்து நடந்திட
துடித்தது தவறோ?
ஆண்டுகள் எத்தனை
ஆனாலும் மாறாது.
செஞ்சோலை சிறுமியர்
விமான குண்டு வீச்சில்.
பரிதாபமாக இறந்ததை.
துயர் தந்து பிரிந்ததை.
கொடுமைகள் செய்தாரை
மன்னிக்க மறுக்கிறது மனம்.
பாடசாலை கல்வி
அது கொண்டது இதை.
முதலுதவி பயிற்சி
பெறுவதும் பயங்கரவாதமோ?
தன்னார்வ பண்பில்
தம்மை இழந்தார்.
பொதுநலம் சேவைக்கு
முன்னர் உயிர் துறந்தாரே!
நதுநசி