செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் | ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் | ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

1 minutes read

சீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வீடமைப்புத் திட்டமானது அரசாங்கத்தினாலும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினாலும் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

பயனாளி வீடுகளின் எண்ணிக்கை: 27

ஒரு வீட்டுப் பிரிவின் விலை: ரூபா 5.19 மில்லியன் (ஆரம்பக் கொடுப்பனவு மற்றும் தவணைக் கொடுப்பனவுகள் தொடர்பான நிபந்தனைகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் விதிக்கப்படும்)

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி: 18.09.2026

விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான தகவல்களை www.media.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ பின்வரும் முகவரிக்குச் சமர்ப்பிக்க முடியும்:

பணிப்பாளர் (ஊடகம்),

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு,

இலக்கம்: 163, ‘அசிதி மெதுர’,

கிருலப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட,

கொழும்பு 05.

 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/334901/bamini-tamil-application-form-for-the-journalists-housing-schem_-_Tamil.pdf

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.