தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் இரண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் பொது மக்களிடம் இன்றையதினம் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மற்றும் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகம் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கபுர வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக நூறு வீடுகள் ஏற்கனவே ஐனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் ஒன்பது இலட்சம் ருபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது