வாழ்க்கையின் வழியில் வந்துவிட்டோம்
வரமா சாபமா என அறியாமல் வாழ்ந்துவிட்டோம்
ஏற்றமும் தாழ்வும் வாழ்க்கையில் சகஜம்
ஏற்றம் சிறிதும் தாழ்வு பெரிதும்தான் நிஜம்
சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பர் ஆனால்
சாண் ஏற முயன்றாலே முழம் சறுக்கிறது இங்கு
நாளை விடியும் என சொன்னவர்கள் சிந்திக்கவில்லை
போலும் நாளை என எதுவும் நெருங்கி வருவதில்லை
எனினும் சிரிக்கிறோம் வாழ்கிறோம் நட்சத்திரமாக ஜொலிக்கிறோம் ஏன் எனில்
கானல் நீரிலும் தாகம் தீர்க்க தெரிந்த சாமர்த்தியசாலிகள் நாங்கள்!
நன்றி : ஆனந்தி ராஜன் | ஒரு துளி இணையம்
