துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்த நடிகர் மகத் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.
நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார்.
அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.