செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வன்னி விழிப்புலன் அற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் (படங்கள் இணைப்பு)

வன்னி விழிப்புலன் அற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் (படங்கள் இணைப்பு)

1 minutes read

DATA அமைப்பு நடாத்திய தமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய வன்னி விழிப்புலன் அற்றோர் சங்க  வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சிமாவட்ட மக்கள் அமைப்பின் நிதியனுசரனையில் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

இன்று காலை பதினோரு மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தலைவர் ஞானகுமார் அவர்களின் தலைமையில்   ஆரம்பமான இந்நிகழ்வில்

தமிழ்ப்  பரா விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்றும் வெற்றியீட்டிய வன்னி விழிப்புலன் அற்ற சங்க வீர வீராங்கனைகளின் பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் போசாக்கு உணவுப் பொதிகள் என்பன  வழங்கி வைக்கப்பட்டது

நிகழ்வில்  சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சிமாவட்ட மக்கள் அமைப்பின் செயலாளர்   சுரேஷ் , விஜயராஜா ஆனந்தி விஜயராஜா, கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபர் விக்கினராஜா, வைத்திய கலாநிதி லிங்கம், ஓய்வுபெற்ற அதிபர் பத்மநாபன், சட்டதரணி அர்ச்சனா ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வில்  கிளிநொச்சிமாவட்ட மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் , விழிப்புலன் அற்றோர் சங்க உறுப்பினர்கள் , மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.