முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரின் பாரம்பரிய இடமான குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் வருகைதந்த பிக்குமார் அடங்கிய குழு ஒன்றினை குமுழமுனை பிரதேச இளைஞர்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர் .
சிலை வைக்க வருவதை அறிந்த குமுழமுனை இளைஞர்கள் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு சென்றவேளை அதை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற நிலையில் தன்னிமுறிப்பு குளக்கட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் வளி மறித்துள்ளனர்
நான்கு வாகனங்களில் சென்ற ஆமத்துறு உள்ளிட்ட பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஆமத்துறு உள்ளிட்ட சகலரையும் ஒட்டுசுட்டான் பொலீசார் வாகனத்துடன் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.