மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா லக்சன் என்ற கைதி வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவம் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கைதி தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி சம்பவ தினமான இன்று மாலை 4 மணியளவில் சிறைச்சாலை கூரை மீது ஏறி, தன்னை தானே காயப்படுத்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை கூரையில் இருந்து பாதுகாப்பாக இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.