செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்று ஓவியா!

வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்று ஓவியா!

0 minutes read

சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார்.

ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.

நான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.