மத்திய இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் எழுச்சிப் பேரணி. தமிழ் இனத்தின் மறக்கமுடியாத வரலாற்று தினமாக மாறியுள்ள மே 18 ல் உலகமெங்குமுள்ள தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் மத்திய இலண்டனில் தமிழர்களால் எழுச்சிப் பேரணி நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளும் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனித பேரவலத்தையும் ஈழத்தமிழர் அனுபவித்த பெருவலி பற்றியும் பேசியவண்ணம் உள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய பதாதைகளை சுமந்த வண்ணம் தமிழர்கள் காணப்படுகின்றார்கள்.






