செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனாவின் போர்வையில் தனிநபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்!!

கொரோனாவின் போர்வையில் தனிநபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்!!

1 minutes read

கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 இணையத்தளங்களின் பெயர்களை ரெக்கோர்ட் பியூச்சர்   (Recorded Future) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய் தொற்று குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரமே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இலங்கையிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனா மீதான பீதியால் பொதுமக்கள் இது  தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி பல இணையதளங்கள், நமது தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெக்கோர்டேட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் கொரோனாவின் பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 வெப்சைட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளங்கள், நமது தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த இணையதளங்களை யாரும் அணுக வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
ரெக்கோர்டட் பியூச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள 14 வெப்சைட்களின் பட்டியல்
1. coronavirusstatus.space
2. coronavirus-map.com
3. blogcoronacl.canalcero.digital
4. coronavirus.zone
5. coronavirus-realtime.com
6. coronavirus.app
7. bgvfr.coronavirusaware.xyz
8. coronavirusaware.xyz
9. coronavirus.healthcare
10. survivecoronavirus.org
11. vaccine-coronavirus.com
12. coronavirus.cc
13. bestcoronavirusprotect.tk
14. coronavirusupdate.tk

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.