
உண்மையில் பாரம் தூக்கும்போது மட்டும்தான் இந்த வலி உண்டாகின்றாத, என்றால் அதில் உண்மையில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும் போது வலி ஏற்படும். எடுத்து காட்டாக சொல்வது என்றால் கதைவை திறக்கும் போது, தண்ணீர் பாட்டிலை தூக்கி குடிக்கும்போது இந்த வலியை உணர முடியும். வலியைத் தவிர இந்த இடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ இருப்பதில்லை. முழங்கையின் வெளிப்புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையானதாக இருக்கக் கூடும்.
முழங்கையின்; வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கிலத்தில் tennis elbow என்று குறிப்பிடுவோம். ஏனென்றால் இந்த நோய் அதிகம் டெனிஸ் விளையாடுபவர்களைத்தான் பெறும்பாலும் பாதிக்கின்றது. இவர்களை மட்டும் பாதிக்கும் என்று சொல்ல முடியாது.
உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசை நாண் (Tendon) உட்காயம் ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இந்த தசை நாண்தான் உங்கள் கைவிரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை சரியான முறையில் இயங்குவதற்கு உதவி செய்கின்றது. வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடம் சூழ்நிலையும் ஏற்படும்.