உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன.
அந்த வகையில் தற்போது துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும் அங்குள்ள திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழித் திரைப்படங்கள் தற்போது திரையிடப்பட்டு வருவதாகவும் கூறப் படுகின்றது..
துபாயில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்தத் திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
