ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன் இணைகிறார்கள் ஒரு படத்தில் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன் இணைகிறார்கள் ஒரு படத்தில்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், மீனா ஆகிய நடிகைகள் தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருந்தவர்கள். ஆனால் மூன்று பேருக்குமே திருமணம் ஆனதையடுத்து வழக்கம்போல் அவர்கள் சினிமாவிலிருந்து கழட்டி விடப்பட்டனர். இருப்பினும், அவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடவில்லை.

சின்னத்திரைகள் மூலம் தங்களை வெளிஉலகத்துக்கு காண்பித்து வந்தனர். அந்த வகையில், சிம்ரன் ஓரிரு படங்களில் நடித்தபோதும், மீனாவோ த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுடன் நடித்த பிறகு பிசியாகி விட்டார். அதேபோல் ரம்யா கிருஷ்ணன் சொந்தமாக தொடர் தயாரித்து தொடர்ந்து தன்னை கதாநாயகியாகவே சின்னத்திரை உலகில் தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், இந்த மாஜி ஹீரோயின்கள் மூன்று பேரையும் இணைத்து கோலிவுட்டில் ஒரு படம் தயாராகிறது. இவர்களுடன் டூயட் பாடப்போவதும் மாஜி ஹீரோக்களா? அல்லது இளவட்ட ஹீரோக்களா? என்பது தற்போதைக்கு சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த படம் தங்களை மையப்படுத்திய கதையில் உருவாவதால், மேற்படி நடிகைகள் மூன்று பேருமே தங்களுக்கு இந்த படம் ஒரு மறக்க முடியாத ரீ-என்ட்ரியை கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளார்களாம்

ஆசிரியர்