வானவில் படம் நாயகி அபிராமி மீண்டும் நடிக்கிறார்வானவில் படம் நாயகி அபிராமி மீண்டும் நடிக்கிறார்

அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் 2000–ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004–ல் இப்படம் வந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார்.

ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வாழ்க்கை மலையாளத்தில் படமாகிறது.

இதில் குட்டியம்மா வேடத்தில் போலீஸ் அதிகாரியாக அபிராமி நடிக்கிறார்.

ஆசிரியர்