73 ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.
இந்த சாதனை ஓவியத்தை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். அதில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து ஒண்டன் புக் ஆஃப் உலக சாதனை படைத்தது.
