கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என பிரபல அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு அரசியல்வாதிகள், முருக பக்தர்கள், இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் மாற்று மதத்தினர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து குரல் கொடுத்தனர்
திரையுலகை பொருத்தவரை ராஜ்கிரண் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ’அண்ணன் ரஜினிகாந்த் அவர்கள் மிகப் பெரிய ஆன்மீகவாதி, தேசியவாதி. எனவே அவர் கந்தசஷ்டி கவசம் விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். அவர் மட்டுமல்ல அத்தனை பேரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று கூறியுள்ளார்
பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் கந்தசஷ்டி கவசம் விவகாரத்திற்காக குரல் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்