சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படம் நாளை திரைக்கு….

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படமான dil bechara நாளை திரைக்கு வர உள்ளது.

MS Dhoni யின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவர், கடந்த மாதம் 14 ஆம் தேதி, மும்பையில் உள்ள தன் இல்லத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை விவகாரம், பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை கங்கனா ரனாவத், பிரபல இயக்குநர்கள் Aditya Chopra மற்றும் Karan Johar இணைந்து சுஷாந்தின் திரைப்பட வாய்ப்புகளை தடுத்ததாக குற்றம் சாட்டியதுடன், பாலிவுட் சினிமா ஒரு சில வாரிசு நடிகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட காரணம் வெளிவராத நிலையில், அவரது கடைசி திரைப்படமான dil bechara நாளை வெளிவர உள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இத்திரைப்படத்தில், அவர் காதல் வயப்பட்ட கேன்சர் நோயாளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்