திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது நடிகை பாலியல் புகார்!

பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர  புகார்.. சாம் பாம்பே கைது! | Poonam Pandey's husband Sam Bombay arrested  after her complaint - Tamil ...

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர் பூனம் பாண்டே.

கடந்த செப்டம்பர் 10-ந் தேதி பூனம் பாண்டே – சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார்.

கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் கோவா போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். திருமணமாகி 2 வாரமே ஆன நிலையில், காதல் கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஆசிரியர்