விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட்

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எப்.ஐ.ஆர்.

இந்நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் அறிவித்து இருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

ஆசிரியர்