தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆத்தி அடி ஆத்தி ..’ எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆத்தி அடி ஆத்தி போட்டா உயிர் மாத்தி..’ எனத் தொடங்கும் புதிய பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி கே. ஆர். சாதிகா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். கிராமிய பாணியிலான பாடல் வரிகள், எளிமையான இசை மெட்டு, வசீகரிக்கும் குரல்கள், ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்திருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.