செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சர்வதேச விருது விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற யாழ். இளைஞன்

சர்வதேச விருது விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற யாழ். இளைஞன்

0 minutes read

அவுஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்திரிக்கும் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 (Australia Talent and Film International Award) நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும், கதாநாயகனாக நடித்தும் வருகிறார்.

அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, மலேசியா கலைஞர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் முழு நீள திரைப்படமே “கூத்தாடி”.

தென்னிந்திய திரைப்பட இயக்குநர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளிவரத் தயாராகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More