இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் ‘இசை புயல்’ ஏ. ஆர் .ரஹ்மான் இசையில் உருவான டக்ஸ் லைஃப் எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியுமான சுருதிஹாசன் பங்கு பற்றி பாடலை பாடி உற்சாக அலையை உண்டாக்கினார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ தக்ஸ் லைஃப் ‘ படத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன் ,அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் என பான் இந்திய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
மும்பை, ஹைதராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு பறந்த படக் குழு .. சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும் பங்கு பற்றியது. இவ்விழாவிலும் கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.